» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

திங்கள் 15, ஜூலை 2019 11:39:58 AM (IST)

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வீட்டின் கதவை உடைத்து, சுமார் 100 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வடக்கன்குளம் அருகேயுள்ள சங்கு நகரில் வசிப்பவர் விபின். இவரது பெற்றோர் கேரளா சென்று விட்டதால், வீட்டைப்பூட்டிவிட்டு, வடக்கன்குளத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தங்கியுள்ளார்.காலையில் விபின் மட்டும் சங்கு நகர் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 சவரன் தங்க நகை, மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பணம், கொள்ளை யடிக்கப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் முன்புற கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் சுவர் ஏறி குதித்து, மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து வள்ளியூர் ஏ.எஸ்.பி ஹரிகரண் பிரசாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்துச்சென்றுள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ பதிவை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory