» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னீர்பள்ளத்தில் குடும்பதகராறில் பெண் கொலை

திங்கள் 15, ஜூலை 2019 12:41:42 PM (IST)

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீர்பள்ளத்தில் குடும்பத் தகராறில் பெண் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

முன்னீர்பள்ளத்தில் உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி செல்வி (35).  இத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மகாராஜனுக்கும், செல்விக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகாராஜன்,  செல்வியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம். 

இதில், பலத்த காயமடைந்த செல்வியை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து மகாராஜனை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory