» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் குறைதீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகள் : நெல்லை ஆட்சியர் வழங்கல்

திங்கள் 15, ஜூலை 2019 1:32:02 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ரூ. 2 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தலைமையில் இன்று (15.07.2019.) நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

மேலும் இந்நிகழ்வில் 2 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஸ் நாராணவரே,  உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory