» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் பிறந்தநாள் மரக்கன்று நட்ட மாணவியர்

திங்கள் 15, ஜூலை 2019 5:59:50 PM (IST)சுரண்டையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவியர்  மரக்கன்று நட்டனர். 

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சுரண்டை ஆலடிப்பட்டி கண்டேயன் குளத்தில் ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவிகள் காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் ஊர் நாட்டாண்மை ராமராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி சுப்பையா, மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சுரண்டை நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்ததின விழா சுரண்டை நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, தமாகா மூத்த நிர்வாகியும் மாநிலச் செயலாளருமான என்டிஎஸ் சார்லஸ் ஏற்பாட்டின்படி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர தலைவர் வசந்தன் தலைமையில், செயலாளர் மாரியப்பன், இளைஞர் அணி அருண் தர்மராஜ், மகேந்திரன், தங்கராஜ், ரமேஷ், நாகராஜன், மனோகர், பாலமுருகன், ராமர், உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory