» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக்கூட்டம்

திங்கள் 15, ஜூலை 2019 8:37:28 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு சொரிமுத்தைய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை பெருந்திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது- சிங்கம்பட்டி அருள்மிகு சொரிமுத்தைய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை பெருந்திருவிழா இந்த ஆண்டு 31.07.2019 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு, திருநெல்வேலி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் ஆண்டுதோறும் வருகை தருவதாலும், பல்வேறு பக்தர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்குவதாலும் அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். 

குடிநீர் வசதிக்காக பெரிய அளவிலான ஜின்டெக்ஸ் டேங்குகளை அமைக்க வேண்டும். தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். ஏற்கனவே கோவில் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பு செய்திட வேண்டும். பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைத்திட வேண்டும். தினமும் விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும். 

108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும்பொதுமக்கள் திருவிழாவிற்கு வந்து செல்லுவதற்கு வசதியாக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கடந்த ஆண்டுகளைப் போல சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என பேசினார்.இக்கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட எஸ்பி., அருண்சக்தி குமார், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.பரஞ்சோதி, உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory