» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை அருகே நடைபெற்ற முப்பெரும் விழா

திங்கள் 22, ஜூலை 2019 11:16:21 AM (IST)



சுரண்டை அருகே நடைபெற்ற முப்பெரும் விழாவில் எம்டிஎஸ் சார்லஸ் பரிசுகள் வழங்கினார். 

சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் மருதுபுரத்தில் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, அன்னதானம் மற்றும் கலை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளரும், மூத்த நிர்வாகியுமான பரங்குன்றாபுரம் என்டிஎஸ் சார்லஸ் தலைமை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்து, தேர்வுகளில் முக்கிய இடம்பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன அதில் கும்பாட்டம், கரகாட்டம், கனில் ஆட்டம், மற்றும் தமிழர்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் குத்தாலிங்கம், தர்மர், கார்த்திக், சாமுவேல், தங்கராஜ், ஸ்டீபன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 1998ல் என்டிஎஸ் சார்லஸ் தலைமையில் மறைந்த மூப்பனாரால் திறந்து வைக்கப்பட்ட காமராஜர் சிலை வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory