» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா : 25ம் தேதி தொடக்கம்

திங்கள் 22, ஜூலை 2019 12:48:30 PM (IST)

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதிஅம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதிஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா  இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. தொடக்க நாளான ஜூலை 25 அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். 

4ஆம் திருநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) நண்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்மன்  4 ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.  10ஆம் நாள் திருநாளான ஆகஸ்ட் 3 ஆம் தேதி  இரவு 6.40-க்கு மேல் 7.10-க்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory