» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திங்கள் 22, ஜூலை 2019 5:32:03 PM (IST)

சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி  மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி  மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளர் விடுமுறை  நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 31.08.2019 சனிக்கிழமை அன்று அலுவலக வேலை நாளாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளுர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளுர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும் எனவும், திருநெல்வேலி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக்கருவூலங்களும் குறைந்த பட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள்  தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என தெரிவித்துகொள்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory