» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் : சுரண்டை அருகே பரபரப்பு

திங்கள் 22, ஜூலை 2019 7:20:28 PM (IST)சுரண்டை அருகே ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த  குலசேகரமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் 124 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 4 இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்ததை தொடர்ந்து பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டாராம். 

இதனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவிற்கு பின்னணியில் பணியாற்றிய ஆசிரியர்கள் தான் காரணம் என்றும்  பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டும் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், 2 மற்றும் 7ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. 

பிற வகுப்புகளூக்கு வழங்கப்படாத புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும்  எனக் கூறி இன்று காலையில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் எஸ்ஐ ராஜேஷ் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர் சேர்க்கையை அதிகரித்து ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என ஆசிரியர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory