» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார்பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது

திங்கள் 22, ஜூலை 2019 8:13:27 PM (IST)

கங்கை கொண்டான் அருகே மோட்டார்பைக்கில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த பால்துரை (36). ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் மாரிதுரை (38). இவர்கள் 2 பேரும், கங்கை கொண்டான் பகுதியில் உள்ள சிற்றாற்று மணலை திருடி, 4 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 மோட்டார்பைக்கில் வைத்து அடிக்கடி கடத்தி சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மோட்டார்பைக்கில் 4 மூட்டை ஆற்று மணலை கடத்தி சென்ற போது, கங்கைகொண்டான் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகளையும், 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory