» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள்மேயர் உட்பட மூன்று பேர் வெட்டிக்கொலை :திருநெல்வேலியில் பரபரப்பு

செவ்வாய் 23, ஜூலை 2019 6:50:21 PM (IST)
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக ஆட்சி காலத்தில் 1996 2001 காலகட்டத்தில் திமுக மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவரது வீடு பாளை., அரசு பாெறியியல் கல்லூரி எதிரே உள்ளது. இந்நிலையில் இன்று மாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள்.

சம்பவம் குறித்து அறிந்ததும் நெல்லை மாநகர காவல்ஆணையர் பாஸ்கரன், மற்றும் மேலப்பாளையம் போலீசார் சென்று நேரடி விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory