» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

படுகொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

புதன் 24, ஜூலை 2019 5:28:52 PM (IST)திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). தி.மு.க.வை சேர்ந்தவரான இவர் தற்போது நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். நேற்று மாலை உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோர் படு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருநெல்வேலிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் ஆறுதல் கூறினார். அப்பாேது பூங்கோதை ஆலடிஅருணா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory