» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி முன்னாள்மேயர் கொலை வழக்கு : திமுக பிரமுகர் சீனியம்மாள் மகனிடம் விசாரணை

திங்கள் 29, ஜூலை 2019 10:15:43 AM (IST)

திருநெல்வேலி  முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் புதுப்பட நான்கு பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. அவரது கணவர் முருக சங்கரன், பணிபெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ம் தேதி மதியம் மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து 3 தனிப் படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் முதலில் ஆதாய கொலை என்ற கோணத்திலும் பின்னர் சொத்துபிரச்சனை,அரசியல் ரீதியான கொலை,தேர்தலில் சீட் வாங்கி தருவதில் பணமோசடியால் நடைபெற்ற கொலை என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றில் பாேடபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள திமுக பிரமுகர் சீனியம்மாள், உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதனை தொடர்ந்து  அப்பகுதியில் உள்ள  ஒரு ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று அந்த பகுதியில் நின்றது கண்டறியபட்டது. மேலும் ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக கண்டறியப்பட்டது . 

கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில்  அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கார்த்திகேயனை பிடித்து பாளை.,  ஆயுதப்படை மைதானத்தில்  வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலையை செய்ய யார் எல்லாம் பயன்படுத்த பட்டார்கள் அவர்கள் யார் என்பது குறித்தும் கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருமுறை ரூ. 50 லட்சம் வரை பணம் கொடுத்து சீட் கிடைக்காத விவகாரத்தில் இந்த கொலை சம்பவம்  நடைபெற்று இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப் படையினரை கைது செய்ய காவல்துறையினர் விரைந்துளனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory