» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2பேர் கைது

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 5:46:55 PM (IST)

செய்துங்கநல்லூரில் மோட்டார் பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கருங்குளம் சுடலை கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த கால்வாய், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வைகுண்ட ராமன்(21) மற்றும் முருகன்(57) ஆகிய இருவரையும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயமும், மோட்டார் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து

நிஹாAug 12, 2019 - 06:09:58 PM | Posted IP 108.1*****

கள்ளசாராயத்தை கட்டுப்படுத்தத்தானே டாஸ்மாக் கொண்டுவந்ததாக சொல்கிறார்கள்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory