» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதி : நெல்லை அருகே பரபரப்பு சம்பவம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 6:13:12 PM (IST)கடையம் அருகே கழுத்தை துணியால் நெறித்து அரிவாளை கொண்டு மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை, பிளாஸ்டிக் நாற்காளிகளை கொண்டு வயதான தம்பதியர் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தனது மனைவி செந்தாமரையுடன் ஒரு ஏக்கரில் அமைந்துள்ள தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அந்த தம்பதியின் 3 பிள்ளைகளும் வெளிமாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று  சண்முகவேல் வீட்டின் முன்பு செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, மூகமூடி அணிந்த இரு நபர்கள் பின்பக்கமாக வந்து அவரது கழுத்தை துணியால் சுற்றி கொலை செய்ய முயல்கின்றனர். சண்முகவேலின் கழுத்தில் ஒருவன் துண்டை போட்டு பின்பக்கமாக இருக்கிக் கொள்ள, மற்றொருவன் அப்போது அங்கு வருகிறான்.

இதற்கிடையே சப்தம் கேட்டு வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை, செருப்பு, வாளி, பிளாஸ்டிக் நாற்காலி என கையில் கிடைத்த பொருட்களை வீசி எறிந்து, சண்முகேவலை வெட்ட முயற்சிக்கும் மர்ம நபர்களை துணிச்சலுடன் விரட்ட முயற்சிக்கிறார். சுதாரித்துக் கொண்ட சண்முகவேலும் மர்ம நபர்கள் மீது பிளாஸ்டிக் நாற்காளியை தூக்கி அடிக்கிறார். அரிவாளை கையில் வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் இரண்டு பேரும் வெட்ட முயன்ற போதும், சளைக்காத தம்பதி கொள்ளையர்கள் இருவரையும் தீரத்துடன் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

ஆனால் செந்தாமரை அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் செந்தாமரையில் கையில் காயம் ஏற்பட்டது. கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் 2 பேரும் வந்தார்களா, அல்லது நகை பறிக்கும் திட்டத்துடன் வந்தார்களா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory