» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்சாரம் பாய்ந்து விபத்து இளைஞர் பரிதாப பலி

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 7:55:45 PM (IST)

கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் பரிதாபமாக பலியானார்.

நெல்லை மாவட்டம் கடையம் சொக்கநாதபட்டியை சேர்ந்தவர்  ராமர் (34). கூலி தொழிலாளி.  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தென்னை நார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாராம். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவர் அங்கு உள்ள மின் மோட்டாரை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமர் உடலை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory