» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரஜினிகாந்த் நல்ல மனிதராக இருக்க வேண்டும் : நெல்லையில் சீமான் பேட்டி

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 8:28:18 PM (IST)

ரஜினிகாந்த் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என்று நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அங்கு கல்வி, வேலை வாய்ப்பு இல்லை, உட்கட்டமைப்பு வசதியில்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறுகிறது. அப்படியென்றால் முத்தலாக் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்கள். அதிகாரம் படைத்தவர்கள் சொல்லும் போது, அடிமைகள் கை கட்டி கேட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் கிருஷ்ணர், அர்ஜூனனுடன் நடிகர் ரஜினிகாந்த் ஒப்பிட்டு கூறியுள்ளார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும்.தமிழ்நாட்டின் கனிம வளங்களை மத்திய அரசு கொள்ளையடிக்க வேண்டும் என நினைக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதற்கு தமிழக அரசும் ஆதரவாக இருக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.


மக்கள் கருத்து

மெய்யன்Aug 13, 2019 - 11:33:48 PM | Posted IP 162.1*****

மனிதம் பத்தி நீங்களாம் பேசலாமா. 5 , 10 பிச்சைகு கொலை பண்ணுற தாங்கள் இதை பேசுவது வேடிக்கை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory