» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம் அணை நீர்மட்டம் 97அடியாக உயர்வு

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 8:44:04 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால் நேற்று 95 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று  97.30 அடியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த அளவு மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்யாததால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.பாபநாசம் அணைக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. 

ஆனால் அது இன்று காலை 1523 கன அடியாக குறைந்தது. இதனால் தினசரி கிடுகிடுவென உயர்ந்த நீர்மட்டம் இன்று குறைவாகவே உயர்ந்துள்ளது.நேற்று 95 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று  97.30 அடியாக உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் நீர்மட்டம் 100 அடியை தாண்டி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory