» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சந்தேக நபர் நடமாட்டம் குறித்து போலீஸுக்கு தெரிவிக்க வேண்டும் : காவல் ஆணையர் சரவணன்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 11:00:01 AM (IST)

பகல் நேரத்தில் அன்னிய நபர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினால் காவல்துறைக்கு எண். 100இல் தகவல் தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,  திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சரவணன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு: கடையம் காவல் நிலைய சரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக இருந்த முதியவர்களை குறிவைத்து இரு முகமூடி திருடர்கள் திருட முயன்றபோது, அந்த தம்பதி தீரத்தோடு போராடி அவர்களை விரட்டியுள்ளனர். 

ரத்தக் காயம் ஏற்பட்ட போதும் விடாமல் போராடி கையில் கிடைத்த பொருள்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கிய செந்தாமரை அம்மாள் வீரப்பெண்மணி. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளார் . விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர். 

முதியோர் பாதுகாப்புக்கு.வீடுகளிலும் , சாலையை நோக்கியும் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வீட்டைச் சுற்றி போதுமான வெளிச்சம் கொடுக்கும் விளக்குகளை பொருத்த வேண்டும்.  இதுபோன்ற சம்பவங்களின் போது பர்கிளர் அலாரத்தை உபயோகப்படுத்தலாம்.  பகல் வேளைகளில் வீடுகளை நோட்டமிட்ட பின்னர் இரவில் திருட முற்படுவர். எனவே பகல் நேரத்தில் அன்னிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் காவல்துறைக்கு (100) தகவல் தெரிவிக்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory