» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் மெயினருவி தடாகத்தில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 12:14:03 PM (IST)

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவி தடாகத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணன் (20) என்பவர் கடந்த 10 ஆம் தேதி நண்பர்களுடன் குற்றாலம் அருவியில் குளித்து கொண்டிருந்த போது காணாமல் போனாராம்.அவர் குளித்து விட்டு கிளம்பிச் சென்று விட்டதாக நினைத்த நண்பர்கள் இரண்டு நாட்களாக எந்த தகவலும் இல்லாத நிலையில் நேற்று குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை குற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒரு உடல் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அது காணாமல் போன சூரிய நாராயணன் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory