» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பணம் கொடுக்காததால் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:55:15 PM (IST)

நெல்லை அருகே குடிக்க பணம் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியினை சேர்ந்தவர் நடராஜன் மகன் பழனிச்சாமி (30). கட்டிட தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 11ம் தேதி மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு உள்ளார் அவர் கொடுக்க மறுக்கவே விஷத்தை கொடுத்து விட்டாராம் 

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பழனிச்சாமி பரிதாபமாக உயிர் இழந்தார் .இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory