» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் சாவு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 6:58:42 PM (IST)

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல்அத்தியூர் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஞானராஜ் சாலமோன் (32). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஞானராஜ் சாலமோன் ஹைதராபாத்தில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தாராம். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சாத்தான்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளனர் 

இது குறித்து ஞானராஜ் ஹைதராபாத்திலிருந்து மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்காக சாத்தான்குளத்திற்கு சென்றுள்ளார் அங்கு பைக்கில் சென்ற அவர் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தாள் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory