» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையில் செல்போன் திருடியவர் கைது

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 7:35:55 PM (IST)

பாளையில் செல்போன் திருடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

பாளை ரஹ்மத் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (63) இவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வந்ததாம். இதனால் வீட்டின் முன்னறையில் செல்வராஜ் அவரது செல்போனை சார்ஜ் போட்டு வைத்துள்ளார். இதையடுத்து திடீரென அவரது செல்போன் காணாமல் போனது இதனால் வீட்டின் எதிரே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த கொத்தனார் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்போனை திருடியது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்  சத்திரத்தை சேர்ந்த பால்சாமி மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory