» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை : தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 11:36:35 AM (IST)

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றாலம் போலீஸ் சரகம் ஐந்தருவி படகு குழாம் எதிர்புறம் வசித்து வருபவர் கண்ணன் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் சித்ரா இறந்து போனதால் கண்ணன் இரண்டாம் தாரமாக அதே பகுதியை சேர்ந்த குத்தாலம் என்ற பெண்ணை 2008 ஆம் திருமணம் செய்து கொண்டுளார்.இந்நிலையில் கண்ணன் குத்தாலம் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த 14 2 2013 அன்று கண்ணன் அவரது மனைவி குத்தாலத்தை அடித்து சித்திரவதை செய்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் இதனை மறைக்க அவரது கழுத்தில் கயிறை கட்டி தனது வீட்டிலேயே தூக்கில் தொங்க விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார்.

ஆனால் குத்தாலத்தின் உறவினர்கள் மணிகண்டன் மாரியம்மாள் ஆகிய இருவரும் கண்ணன் குத்தாலத்தை அடித்து சித்திரவதை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் குற்றாலம் போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்இந்த  வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி விஜகுமார் நேற்று  தீர்ப்பு வழங்கினார். கண்ணன்அவரது மனைவி குத்தாலத்தை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்தது.நிரூபணம் ஆகியுள்ளதால்  கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபதாரமும் விதித்து பரபரப்பு  தீர்ப்பு வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory