» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 12:38:12 PM (IST)

மணிமுத்தாறு, சேர்வலாறு பாபநாசம் அணைகளில் இருந்து நீர் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதானஅணைகளாக மணிமுத்தாறு, சேர்வலாறு பாபநாசம் அணைகள் உள்ளது. விவசாயத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மணிமுத்தாறு, சேர்வலாறு பாபநாசம் அணைகளில் இருந்து நீர் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம். சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை,தூத்துக்குடி ஆகிய வட்டங்களில் 24,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory