» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 1:32:26 PM (IST)முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார், பாளை மண்டல தலைவர் மாரியப்பன்,மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் ,மனோகரன்,சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் , முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,

நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர்  காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை ,முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் உமாபதி சிவன், துணை தலைவர் உதயகுமார், வெள்ளபாண்டியன், சிவன்பெருமாள் ,மாவட்ட செயலாளர் ரயில்வே கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி,பழவூர் ராமச்சந்திரன், பாக்கியகுமார்,சுல்தான், மண்டல தலைவர் ஐயப்பன், வட்டார தலைவர் சொர்ணம்  காலாங்கரையான், மேலப்பாளையம் பொறுப்பாளர் ரசூல்மைதீன், மணி, சேவாதள சரவணன், மயில் ராவணன், உக்கிரன்கோட்டை செல்லபாண்டியன்,செயலாளர் குறிச்சி கிருஷ்ணன், பேட்டை சுப்பிரமணியன், நசீர், இளைஞர் காங்கிரஸ், ராஜீவ்காந்தி, வரகுண பாண்டியன், விசுவாசம், தங்கசாமி,கிருஷ்ணன், மகளிர் அணி ஸ்டெல்லா மேரி, சிவசுப்ரமணியன், ராதாகிருஷ்ணன், எம்.ஏ.எஸ்.அபூபக்கர், துரை செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு  பாளையில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory