» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சட்டக்கல்லுாரி மாணவர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச் செயல்

புதன் 21, ஆகஸ்ட் 2019 11:30:39 AM (IST)




தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நெல்லை சட்டக்கல்லுாரி மாணவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சிவகுமார் (40). இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டில் நிலப்பிரச்சனை தகராறில் அத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இவர் முதல் எதிரியாக சிவகுமார் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில் ஆஜராக சிவகுமார் இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள சாலையில் நடந்து வந்த அவரை பைக்கில் வந்த 4பேர் கொண்ட கும்பல் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியும் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. 

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து எஸ்பி அருண் பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகுமார் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிவகுமாரின் மூத்த சகோதரர் ராம்குமார் திருநெல்வேலியில் வழக்கறிஞராக உள்ளார். மற்றொரு சகோதரர் முத்துக்குமார் என்பவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார்.  சிவகுமார் நெல்லை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory