» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா

புதன் 21, ஆகஸ்ட் 2019 12:10:52 PM (IST)தமிழக  போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தலின் படி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இயற்கை வளங்களை உருவாக்கி பசுமை பாரதம் படைத்திட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

முதல் மரக்கன்றை  நட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி  துவங்கி வைத்தார் . அவரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் நேர்முக உதவியாளர் போத்திராஜ், அலுவலக மேலாளர் சந்தோஷ், தமிழ் மற்றும் தமிழ் நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு மாநில செயலாளர் வைகை குமார், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆதிலா ஜாஹீர், தெஷ்னாமூர்த்தி குமார்,கீழப்பாவூர் விவேகானந்தர், பாலன் மாரியப்பன், ஜெபா பிரேம்ஆனந்த் ,பாலா,பாலாஜி முருகன்,கிருஷ்ணா துரை,கருணை ஷேக்,அக்ஷயா குமார்,சங்கீதம் உசேன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள்,பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் அனைவருக்கும் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory