» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் சாவு

புதன் 21, ஆகஸ்ட் 2019 1:09:35 PM (IST)

பாளை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியபோது பைக் மின்கம்பத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பாளை அருகே உள்ள சீவலப்பேரி போலீஸ் சரகம் குப்பை குறிச்சி உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்து செல்வம் (24). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். வீட்டின் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக  தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த மின் கம்பத்தில் பைக் மோதி உள்ளது. 

இதில் கீழே தூக்கி வீசப்பட்ட முத்துசெல்வம் பலத்த காயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்து செல்வம் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory