» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேராசிரியரை ஆபாச படம் பிடித்து மிரட்டி பணம் பறிப்பு : 2 வாலிபர்கள் கைது

புதன் 21, ஆகஸ்ட் 2019 5:42:45 PM (IST)

நெல்லை பேராசிரியரை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வாலிபர்கள் 2  பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர் ஒருவர் 2 வாலிபர்கள் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மிரட்டுவதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சிறுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (24) மற்றும் பாலை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த பெருமாள் மகன் முத்துப்பாண்டி (29) என தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தினேஷ் கல்லூரிகளுக்கு சென்று புத்தகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாராம். இதையடுத்து நெல்லையில் உள்ள கல்லூரி பேராசிரியருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தவறான உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பேராசிரியர் தினேஷிற்கு செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து தினேஷ் நெல்லையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து அடிக்கடி பேராசிரியரிடம் பணம் வாங்கி செலவு செய்துள்ளார். 

அப்போது புதுப்பேட்டை சேர்ந்த தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களான அவர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில்  செலவுக்கு பணம் கிடைத்த விபரத்தை கூறியுள்ளார். முத்துப்பாண்டி பேராசிரியருடன் உல்லாசமாக இருக்கிறேன் என்றும் அவரை தனக்கு பணம் கொடுக்குமாறு கூற சொன்னாராம். பின்னர் இருவரும் சேர்ந்து வேய்ந்தான் குளத்திற்கு ஆசிரியர் வரவழைத்து அங்கே அவருடன் முத்துப்பாண்டி தவறான உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை தினேஷ் செல்போனில் படம் பிடித்துள்ளார். 

பின்னர் செல்போனில் பிடித்த படத்தை அவரிடம் காட்டி பணம் கேட்டுள்ளனர். பேராசிரியர் அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மீண்டும் பணம் கேட்கவே பாளை., ரெட்டியார்பட்டி ரோட்டுக்கு வரச்சொல்லி பேராசிரியர் இருபதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தினேஷ் மற்றும் முத்து பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory