» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரி பட்டமளிப்பு விழா தேதி மாற்றம்

வியாழன் 22, ஆகஸ்ட் 2019 10:21:40 AM (IST)

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று 22 ம் தேதி நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களினால் இந்த தேதி மாற்றப்பட்டு வரும் 28ம் தேதி அன்று புதன் கிழமை காலை 9 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கனிவேலவன் கலையரங்கில் வைத்து நடைபெற உள்ளது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  துணைவேந்தர் பிச்சுமணி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிக்க உள்ளார். எனவே பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று நேரில் வந்து பட்டம் பெற உள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பொறுப்பு ஜெயா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory