» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவியில் குளிக்க திரண்ட சுற்றுலாபயணிகள் ° நீர்வரத்து அதிகாிப்பு

வியாழன் 22, ஆகஸ்ட் 2019 11:17:08 AM (IST)



நெல்லை மாவட்டத்தில் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தற்பொழுது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.மேலும் பழைய குற்றால அருவி, ஐந்தருவியிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாளை தொடங்கி 3 நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory