» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ஞாயிறு 8, செப்டம்பர் 2019 12:05:55 PM (IST)

தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு முத்துநகர் ரயில் நேற்றிரவு கிளம்பி சென்றது.இந்த ரயில் 3வது ரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்ற போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில்,இறந்தவர் டூவிபுரம் 6வது தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் முத்துராமலிங்கம் (38) என தெரிய வந்தது. லாரி டிரைவராக உள்ளார்.திருமணமாகி மனைவி, மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது அருந்து விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து

அருண்Sep 10, 2019 - 06:38:02 PM | Posted IP 108.1*****

சரக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory