» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திங்கள் 9, செப்டம்பர் 2019 1:10:53 PM (IST)ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி ஸ்டுடர்ஸ் அசோசியேசன், தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜன்ட் அசோசியேசன் உள்ளிட்ட சங்கத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டுடர்ஸ் அசோசியேசன் தலைவர் பி.எஸ்டிஎஸ்டி வேல்சங்கர் செயலாளர் செலஸ்டின் வில்லவராயர்,துணை தலைவர் பீர் முகம்மது, கஸ்டம்ஸ் ஏஜன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கார்த்திக்பிரபு ஆகியோர் தூத்துக்குடி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியதாவது, தூத்துக்குடியில் கடந்த 23 வருடங்களாக தொழில் சார்ந்த வளர்ச்சிகளையும், தனி நபர் வருமானம், வேலைவாய்ப்பினையும் பெருமளவு உயர்த்தியதில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பெரும்பங்கு வகித்தது. 

ஸ்டெர்லைட் காப்பர் தமிழகத்தின் 5வது பெரிய நிறுவனம் மற்றும், ஜிடிபி 3.3 சதவித பங்களிப்பினை அளித்தது. வேறு எந்த தொழிற்சாலைகளோடும் ஒப்பட இயலாத அளவில் மூதலீட்டளவு ரூ. 3727 கோடியில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தருகிறது. தொழில்வாரியாக ரூ. 1900 கோடி வருமானத்தை மாநகராட்சிக்கு ஈட்டி தந்து தூத்துக்குடி யின் கட்டமைப்பு மற்றும் சீரமைப்புக்கு நிதி ஆதாரமாக இருந்து வருகிறது.

பெண் குழந்தைகள் கல்வி, சுய உதவிகுழுக்கள், மருத்துவமுகாம், மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் என பல பணிகள் மூலம் தூத்துக்குடிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. தூத்துக்குடி துறைமுக வர்த்தகத்தில் 17 சதவித பங்களிப்புடன் துறைமுகத்திற்கு ரூ. 114 கோடி வருவாய் அளிக்கிறது. சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. அசைக்க முடியாத அடையாளமான ஸ்டெர்லைட் நிறுவனம் விரும்பதகாத சம்பவங்களால் மூடப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த ஆலையை நம்பியுள்ள பல ஆலைகள் மூடப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழில் உரிமையாளர்களும், லாரி உரிமையாளர்கள், அதை சார்ந்த சிறுகுறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். ஆலையை மூடியதால் தூத்துக்குடியில் 80 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலையை மூடி 15 மாதங்கள் ஆன நிலையில் தொழிற்துறையை சேர்ந்த பல மக்கள் செய்வதறியாது உள்ளனர். எனவே எங்கள் கோரிக்கைகளை ஏற்று ஆலையை மறுபடி திறக்க தமிழகஅரசுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டு கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கைகளை முன்வைத்து, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகன், தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜன்ட் அசோசியேசன் செயலாளர் ஆறுமுகச்சாமி, மற்றும் வீரமணி ஆகியோர் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

MayadiSep 10, 2019 - 03:12:56 PM | Posted IP 108.1*****

Vera vela parunga pa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory