» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 7:24:21 PM (IST)

பாளை பெருமாள்புரத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மீன் சாப்பாடு கடைக்காரர்  தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் ஜான்சன் ராசையா (49). இவர் என்ஜிஓ காலனியில் குடும்பத்துடன் மீன் சாப்பாடு கடை நடத்தி வருகிறார். ஜான்சன் ரஷ்யாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்சன் ராசையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory