» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதன் 11, செப்டம்பர் 2019 11:00:49 AM (IST)

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை மறுபரிசீலனை செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.நேற்று தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், முன்பு ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையிலும் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற  புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றம் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சிவசூரியநாராணயன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் மந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஜாபர்அலி, ஜோதிமுருகன், பால்ராஜ், மணிகண்டன், ரமேஷ்,  பாரதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory