» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் கொளுத்தும் வெயில் : பொதுமக்கள் அவதி

புதன் 11, செப்டம்பர் 2019 11:16:10 AM (IST)

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் வெயிலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் தமிழகத்தில் வெயில் கொளுத்தும். ஆனால் தற்போது கோடை முடிந்து செப்டம்பர் மாதமும் கடந்த ஒரு வார காலமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை யில் கடும் வெயிலடித்து வருகிறது. இதனால் பகலில் வெளியில் செல்லவே பொதுமக்கள் அஞ்சும் நிலை உள்ளது. மாலைக்கு பிறகே தங்கள் தேவைகளுக்காக வெளியில் வருகின்றனர். 

குறிப்பாக முதியவர்கள், ரத்தஅழுத்த நோய் உள்ளவர்கள் பகலில்  வெளியே வர அஞ்சுகின்றனர். மழை பெய்து சூட்டை தணிக்காதா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வெயில் தாக்கத்தால் திருநெல்வேலி பகுதிகளில் தர்பூசணி, ஜுஸ், கூல்டிரிங்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory