» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மானுாரில் இரவில் ஒருவர் வெட்டிக்கொலை : போலீஸ் விசாரணை

புதன் 11, செப்டம்பர் 2019 11:48:06 AM (IST)

நெல்லை மானுாரில் இரவில் முதியவர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மானுாரை சேர்ந்தவர் முருகன் (65). இவருக்கு மனைவி , 4 வாரிகள் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். மும்பையில் வேலை செய்யும் முருகன் விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.சம்பவத்தன்று இரவு முருகன் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது அ்ங்கு வந்த ஒருவர் முருகனிடம் பேசிக்கொண்டிருந்தாராம். 

திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர் முருகனை வெட்டியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மானுார் போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory