» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் விபத்தில் படுகாயம்: சிறுவன் பரிதாப உயிரிழப்பு

புதன் 11, செப்டம்பர் 2019 1:05:20 PM (IST)

வல்லநாட்டில் பைக் விபத்தில் கீழே விழுந்த 2 வயது சிறுவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார் 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் இசக்கி(35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சஞ்சனா (6) என்ற பெண் குழந்தை, நரேன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி பாளையங்கோட்டை உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினர் அனைவரும் ஒரே பைக்கில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அப்போது வல்லநாடு அருகே வரும்போது திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் சிறுவன் நரேன் கீழே விழுந்துள்ளார் 

அப்போது அங்கிருந்த கல் சிறுவன் தலையில் பட்டதில் அவர் படுகாயம் அடைந்து பாளை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று காலை சிறுவன் நரேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் பாளை ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory