» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காட்டில் பெய்த திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

புதன் 11, செப்டம்பர் 2019 1:52:24 PM (IST)

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் கொளுத்திய நிலையில் களக்காட்டில் மதியம் பெய்த மழையால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் தமிழகத்தில் வெயில் கொளுத்தும். ஆனால் தற்போது கோடை முடிந்து செப்டம்பர் மாதமும் கடந்த ஒரு வார காலமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை யில் கடும் வெயிலடித்து வருகிறது. வெயில் தாக்கத்தால் திருநெல்வேலி பகுதிகளில் தர்பூசணி, ஜுஸ், கூல்டிரிங்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் நெல்லை மாவட்டம் களக்காட்டில் வெயில் அடித்த நிலையில் திடீரென சூழல் மாறி கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. வெயில் கொளுத்திய நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory