» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேரளாவுக்கு சந்தன மரங்கள் கடத்தல் ? தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை

புதன் 11, செப்டம்பர் 2019 5:43:04 PM (IST)

புளியரை வழியாக சந்தன மரங்களை வெட்டி கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலத் வனத்துறைக்கு சொந்தமான 3  வனப்பகுதிகள் பல ஏக்கர் நிலத்தில் சந்தனமர தோட்டங்கள் உள்ளன. இதில் தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் கோட்டைவாசல், கடம்பன்பாறை ஆகிய  பகுதிகளில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் 115 ஹெக்டேர் பரப்பளவில் பல ஆயிரக்கணக்கான சந்தன மரங்கள் உள்ளன. இந்த சந்தன மரங்களை வெட்டி சிலர் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன 

அதன் அடிப்படையில் வனத்துறையினர் சந்தன மர காடுகள் உள்ள பகுதிகளில்  2015 ஆம் ஆண்டு நவீன ரக கேமராக்களை பொருத்தியுள்ளனர் ஆனாலும் கடத்தல் கும்பல் கேமரா வைக்கப்பட்ட பகுதியில் வெட்டாமல் மற்ற பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த காலங்களில் தமிழக-கேரள வனத்துறையினர் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலைப் பிடிக்க சந்தன மர காடுகளில் அவர்களை சுற்றிவளைத்த நிலையில் அந்த கடத்தல் கும்பல் வனத்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிச் சென்ற சம்பவங்களும் பல நடைபெற்றுள்ளன.

தமிழக-கேரள வனப்பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்துவதில் செங்கோட்டை கற்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதாக வனத்துறையினர் புகார் கூறியுள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் தமிழக போலீசார் உதவியோடு தமிழக கேரள  வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளவனப் பகுதியில் மர்ம கும்பல் சந்தனமர தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை வெட்டி கடத்த முயற்சிப்பதாக கேரள வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க வனத்துறையினர் புதிய யுக்தியை கையாள தொடங்கியுள்ளனர். அதன்படி நேற்று முதல் கேரள வனத்துறையினர் தங்கள் வனத்துறை ஊழியர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள்  24  மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தனிப் படையினருடன் அதிக பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இடம்பெற்றுள்ளது. இந்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால் சந்தன மர கடத்தல் சம்பவங்கள் தடுக்க பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory