» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பேருந்து மோதி ஒருவர் பரிதாப உயிரிழப்பு

புதன் 11, செப்டம்பர் 2019 7:04:12 PM (IST)

சேரன்மகாதேவி அருகே அரசுபேருந்து மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள மேலக்கூனியூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்  (59). இவர் இன்று காலை கடைக்கு செல்வதற்காக கூனியூருக்கு சென்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன் மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory