» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போக்குவரத்து வழக்குகளுக்கான லோக்அதாலத் : 14 ம் தேதி நடக்கிறது

புதன் 11, செப்டம்பர் 2019 7:42:46 PM (IST)

தழிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி போக்குவரத்துக்கழக வழக்குகள் லோக்அதாலத் மூலம் சமரச தீர்வு செய்ய முகாம் நடத்தப்படுகிறது.
 
அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட பேருந்துகள் மீதான வழக்குகளுக்கு சமரச தீர்வு லோக்அதாலத் மூலம் செய்து கொள்ள 14.09.2019  அன்று   முகாம் நடைபெற உள்ளது.  இது தொடர்பாக. திருநெல்வேலி கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் சென்னை சார்பில் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை உயர்நீதி மன்ற கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு காண லோக்அதாலத் மூலம்  செய்து கொள்ள  14.09.2019 அன்று முகாம் நடைபெற உள்ளது.

இதில் திருநெல்வேலி கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொடர்பான விபத்து வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் வழக்குகளுக்கு தீர்வு பெறலாம். இவ்விதம் வழக்கில் ஆஜராகும்  நபர்களுக்கும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படும்.  இது குறித்த விபரங்களுக்கு திருநெல்வேலி மண்டலத்தை சேர்தவர்கள் 0462-2500393 என்ற எண்ணுக்கும் நாகர்கோவில் மண்டத்தை சேர்ந்தவர்கள் 04652-2224461 என்ற எண்ணுக்கும் தொலைபேசி வழியாக தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுளளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory