» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயம்

புதன் 11, செப்டம்பர் 2019 8:00:30 PM (IST)

குருவிகுளத்தில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவனை தேடி வருகிறார்கள்.

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த அத்திப்பட்டியை சேர்ந்தவர் மாசானமுத்து. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (37). இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் முத்துக்குமார் (14). இவர் கழுகுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம்வகுப்பு படித்து வருகிறான்.இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 

அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவன் கிடைக்க வில்லை. எங்கு சென்றான்? என தெரியவில்லை. மேலும் காணாமல் போன மாணவர் ஏ.டி.எம்.கார்டையும் கொண்டு சென்றதாகவும் அதிலிருந்து ரூ.18 ஆயிரம் எடுத்துள்ளதாக தெரிய வந்தது. இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவனை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory