» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்

புதன் 11, செப்டம்பர் 2019 8:47:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
   
திருவோண திருவிழாவையொட்டி குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இன்று காலை முதலே பல இடங்களில் மாவேலி ஊர்வலம் நடந்தது. இதில் மன்னன் வேடமிட்டு சென்றவர்கள் முத்துக்குடை ஏந்தியபடி மலர்களை தூவி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அது போல் திருநெல்வேலி மாவட்டத்திலும் ஏராளமான கேரள மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

ஓணப்பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஓண விருந்து. இன்று ஓணம் கொண்டாடும் மக்கள் வீடுகளில் ஓணவிருந்து தயாரித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறி மகிழ்ந்தனர்.ஓண விருந்தில் அறுசுவை பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory