» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

களக்காடு அருகே முன்விரோத தகராறில் ஓட்டுனரை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் வேலவன்குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சக்திவேல் (37). ஓட்டுனர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குசலவன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குசலவன் மகன்கள் முத்து, பொன்பாண்டி ஆகியோர் சக்திவேல் வீடு வழியாக சென்று கொண்டிருந்தனர். 

அப்போது சக்திவேல் வளர்த்து வரும் நாய் அவர்களை பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படகிறது. இதனால் அவர்கள் இருவரும் நாயின் மீது கற்களை வீசியதால்  சக்திவேல் நாய் மீது கற்களை வீசியதை தட்டிக் கேட்டார். இதனால் கோபம் அடைந்த முத்து, பொன்பாண்டி ஆகியோர் சக்திவேலை கம்பால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory