» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் மோசடி போக்குவரத்துக்கழக ஊழியர் கைது

வியாழன் 19, செப்டம்பர் 2019 5:34:00 PM (IST)

நெல்லையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி செய்த போக்குவரத்துக்கழக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சேது ராமலிங்கம். இவரது மகன் எம்பிஏ படித்து உள்ளாராம்.  அவருக்கு அரசு வேலைக்காக சேது ராமலிங்கம் முயற்சி செய்து கொண்டிருந்தாராம். இதனை அறிந்த அவரது நண்பர் ஒருவர் பாளை குலவணிகர்புரம் வீர மாணிக்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் பெருமாள் என்ற செல்வக்கனியை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். செல்வக்கனி நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து செல்வகனி சேது ராமலிங்கம் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 10 லட்சம் பெற்றுள்ளார். 

ஆனால் ஆறு மாத காலம் ஆகியும் இதுவரை சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை முறையிட்டும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லையாம். இச்சம்பவம் குறித்து சேதுராமலிங்கம் நெல்லை சந்திப்பு சிட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள் என்ற செல்வக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory