» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் போஷான் அபியான் திட்ட விழிப்புணர்வு

வியாழன் 19, செப்டம்பர் 2019 6:57:32 PM (IST)சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் என்எஸ்எஸ் அணி எண் 201 சார்பில் போஷான் அபியான் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ( பொறுப்பு ) ஜெயா தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மெர்லின் சீலர் சிங் வரவேற்றுப் பேசினார். சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மதன சுதாகர் போஷான் அபியான் திட்டம் குறித்தும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், நோய் வராமல் தடுப்பதற்கு எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான வாழ்விற்கு உணவின் பங்கு குறித்து பேசினார். 

சேர்ந்தமரம் சுகாதார அலுவலர் சுப்பையா வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் போஷன் அபியான் திட்டம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கார்த்திகேயன், கற்பக ஜோதி ஜென்சி மேரி உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன பேராசிரியர் நாராயணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory