» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தணணீர்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:39:34 AM (IST)

தொடரும் மழையால் குற்றாலத்தில் அருவிகள் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுகிறது

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் சுமாராக இருந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அருவிகள் தொடர்ந்து பொங்கி பாய்ந்த வண்ணம் உள்ளன. தற்போது சீசன் காலம் நிறைவடைந்த நிலையிலும் அருவிகள் பொங்கி பாய்ந்த வண்ணம் உள்ளன.கடந்த இரண்டு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவில் சாரல் இல்லை. இன்று காலை முதல் மாலை வரை லேசான வெயில் காணப்பட்டது. 

இதமான காற்று வீசியது. மேகமூட்டம் இல்லை. சாரல் இல்லாத நிலையிலும் பேரருவி போதிய நீர் பெருக்குடன் வழிந்தோடியது. ஐந்தருவி நான்கு பிரிவுகளாக பிரிந்து தண்ணீரை பாயவிட்டது.அருவிகள் பொங்கி பாயும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory