» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடி மராமத்து பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:46:57 PM (IST)பாளையங்கோட்டை மற்றும் நான்குநேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது பாளையங்கோட்டை ஒன்றியம் பீர்க்கன்குளம் குளத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் குளத்தினை ஆழப்படுத்தி  கரைகளை சீர்செய்யும் குடிமராமத்து பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து மழைக்காலத்திற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட தமிழக அரசு குடிமராமத்து பணிகளை போர்கால அடிப்படையில் செய்து வருகிறது. மேலும் ஊராட்சிக்குட்பட்ட 118 சிறு பாசன குளங்களிலும் 215 ஊரணிகளிலும் குடிமராமத்து பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.  

இதில் 118 சிறு பாசன குளங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.590 இலட்ச மதிப்பிலும், 218 ஊரணிகளில் தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.218 இலட்ச மதிப்பில் என ரூ.808 இலட்ச மதிப்பிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கண்மாய்களை சரிசெய்யவும் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 15 இலட்சம் மதிப்பிலும் குடிமராமத்து பணிகள் ரூ.23 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளபடவுள்ளது. 

மேலும் ஏற்கனவே பொதுபணித்துறை மூலம் தமிழக அரசு 185 பணிகளை ரூ.4238 லட்டம் மதிப்பிட்டில் வழங்கி குடிமராமத்து பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இது தவிர மாவட்டம் முழுவதும் 200 நீர்நிலைகள் கண்டறியபட்டு அரசு நிதிகள் இல்லாமல் குடிமராமத்து பணிகள் தன்னார்வளர்கள், புரவலர்கள் மூலம் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் எதிர்காலத்தில் மழைநீர் சேகரிக்கப்படுவதோடு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்  என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், டி.வி.எஸ் குழம கள இயக்குநர் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory